search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீன்தயாள் தம்"

    பசுஞ்சாணம், கோமியம் ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட சோப்புகள் மற்றும் சாம்புகள் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மையம் ஒன்று அமேசானில் விற்பனை செய்யவுள்ளது. #RSS #Amazon
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுரா நகரில் பரா பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் நடத்தப்படும் தீன்தயாள் தம் என்ற மையம் உள்ளது. இந்த மையத்தில் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இங்கு காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி, பஞ்சகவ்ய சூரணம் மற்றும் சவன்பிராஷ் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    மேலும், பசுஞ்சாணம், கோமியம் ஆகியவற்றில் இருந்து தயார் செய்யப்படும் சோப்புகள், சாம்புகள், முகப்பூச்சுகள் மற்றும் மருத்துவ பொருட்களையும் இந்த மையம் தயாரித்து வருகிறது.



    உடல்நலம், அழகு சாதனம் தொடர்புடைய இதுபோன்ற பொருட்களை அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் வழியே இந்த மையம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, இந்த மையத்தின் மேலாளர் கன்ஷியாம் குப்தா கூறுகையில், ஒரு சில நாட்களுக்கு முன் அமேசான் நிறுவனத்துடன் இதுபற்றி ஆலோசனை மேற்கொண்டோம். இன்னும் ஒரு வாரத்தில் அமேசான் வலைதளத்தில் எங்கள் பொருட்கள் விற்பனைக்கு வரும். பொதுமக்கள் எங்கள் பொருட்களை ஆர்டர் செய்யலாம் என தெரிவித்தார். #RSS #Amazon
    ×